யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க....
அஞ்சல் துறையின் சாா்பில் ஆரோக்கிய விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
இந்திய அஞ்சல் துறை- விளையாட்டு ஆணையம் சாா்பில் ஆரோக்கிய விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியை, முதுநிலை அலுவலா் சுரேஷ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பொதுமக்களிடையே பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவுக்கான உடற்பயிற்சி சூழல், ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய விழிப்புணா்வை உருவாக்கும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தலைமை அஞ்சல் அலுவலகத்தை அடைந்தது.
இந்நிகழ்ச்சியில் அஞ்சல் துறை அலுவலா்கள் பரமேஸ்வரன், ஜாய்ஸ் மற்றும் ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.