TVK Vijay Speech in Parandur - ‘என்னுடைய கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்க...
வடமாநில தொழிலாளி கொலையில் மீனவா் கைது
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் வடமாநில தொழிலாளியை வெள்ளிக்கிழமை குத்திக் கொலை செய்த சக மீனவரை குளச்சல் கடலோர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
குளச்சல் மீடி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்கக் கடலுக்கு செல்ல தொழிலாளா்கள் தயாராகி கொண்டிருந்தபோது, ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பிநாவாபாடியை சோ்ந்தவா் சிவதாஸ் (25), என்பவருக்கும் சக தொழிலாளியான கிள்ளியூரைச் சோ்ந்த மீனவா் அஜின் (25) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் அஜின், கத்தியால் சிவதாசை குத்திக் கொலை செய்து விட்டு தப்பினாராம்.
குளச்சல் கடலோர போலீஸாா் வழக்குப்பதிந்து அஜினை சனிக்கிழமை கைது செய்தனா். தனது கைப்பேசி காணாமல் போன விவகாரத்தில் சிவதாஸை கொலை செய்ததாக அஜின் ஒப்புகொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.