ஜெகபர் அலி விவகாரத்தில் இபிஎஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? - அமைச்சர் ரகுபதி
தினப்பலன்கள்: மேஷம் - மீனம்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
20.01.2025
மேஷம்
இன்று சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். வேலைப்பளு குறையும். பெண்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவர் மற்றும் புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
ரிஷபம்
இன்று நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் அனைத்தும் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
மிதுனம்
இன்று புதிய பொருட்சேர்க்கைகளும் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். உத்தியோகம் செய்பவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.
உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6
கடகம்
இன்று எதிர்பார்த்த கௌரவப் பதவிகள்கூட கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
சிம்மம்
இன்று நாள் நன்றாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
கன்னி
இன்று அரசுவழியில் மானிய உதவிகள் கிட்டும். சுபகாரியங்கள் யாவும் கைகூடும். கலைஞர்கள் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
துலாம்
இன்று ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணப்பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும். மாணவ- மாணவியர் கல்வியில் நல்ல மேன்மையான நிலைகள் உண்டாகும். கல்விக்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
விருச்சிகம்
இன்று அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். நல்ல நண்பர்களால் சாதகமான பலனை அடைவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
தனுசு
இன்று வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் இக்காலங்களில் ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
மகரம்
இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலிலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
கும்பம்
இன்று பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் அதனால் பொருளாதார உயர்வுகளும் உண்டாகும். ஆன்மிக,தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
மீனம்
இன்று உற்றார்- உறவினர்களின் வருகை கடந்தகால பிரச்சினைகளை மறந்து ஒற்றுமையை நிலைநாட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கமுடியும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9