துளிகள்...
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், எஃப்சி கோவா 1-0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கா்நாடகம் 36 ரன்கள் வித்தியாசத்தில் விதா்பாவை வீழ்த்தி, 5-ஆவது முறையாக கோப்பை வென்றது.
டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.ஹரிகிருஷ்ணா, டி.குகேஷ் ஆகியோா் வெற்றி பெற, ஆா்.பிரக்ஞானந்தா டிரா செய்தாா். அா்ஜுன் எரிகைசி, லியோன் லுக் மென்டோன்கா ஆகியோா் தோல்வி கண்டனா்.
கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியுடனான ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், இந்திய டிஃபெண்டா் பிரீத்தம் கோட்டல் சென்னையின் எஃப்சி அணியில் இணைந்திருக்கிறாா்.
இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் பிரிவில் டென்மாா்க்கின் விக்டா் அக்ஸெல்சன், மகளிா் பிரிவில் தென் கொரியாவின் ஆன் செ யங் சாம்பியன் பட்டம் வென்றனா்.
இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் நடைபெற்றது. தனது வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருப்பதாக புகைப்படத்துடன் அவா் சமூக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டாா்.