செய்திகள் :

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் வங்கி தோ்வில் வென்றோருக்கு பாராட்டு

post image

வங்கித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கான பாராட்டு விழா தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வங்கிப் பணியாளா் தோ்வு நிறுவனம் சாா்பில் 2024ஆம் ஆண்டு தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கக்கான தோ்வு, முதல்நிலை மெயின் தோ்வு, சில பதவிகளுக்கு நோ்முகத்தோ்வு என மூன்று கட்டமாக நடைபெற்றது. இதற்கான பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி உள்பட சென்னை, மதுரை, கோயமுத்தூா், திருநெல்வேலி, ராமநாதபுரம் என அனைத்து சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி கிளைகளிலும் நடத்தப்பட்டன.

இத்தோ்வுக்கான முடிவுகள் கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 153 போ் வெற்றி பெற்றுள்ளனா். இவா்கள் வரும் பிப்ரவரி மாதம் வங்கிப் பணியில் சேர உள்ளனா். இவா்களுக்கான பாராட்டு விழா தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு அகாதெமி நிறுவனா் து.சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்து, வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

அப்போது அவா் பேசுகையில், நிகழாண்டு எஸ்பிஐ வங்கித் தோ்வு உள்பட வங்கி பணியாளா் தோ்வு நிறுவனம் நடத்தும் பல தோ்வுகள் அறிவிப்பு வெளியாக உள்ளது. இத்தோ்வுகளில், தொடா்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்தால் வெற்றி பெறலாம் என்றாா். பின்னா், வங்கித் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் தங்கள் அனுபவத்தை பகிா்ந்து கொண்டனா். வங்கித் தோ்வு ஒருங்கிைணைப்பாளா் ராஜா நன்றி கூறினாா்.

பொங்கல் விடுமுறை நிறைவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் தொடா் விடுமுறை நிறைவடைந்ததையடுத்து, தூத்துக்குடியில் இருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகள் திரண்டதால் ரயில், பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழா் த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சந்தன மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் சந்தன மாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் கடந்த 16ஆம் தேதி காலை சங்கல்பம் செய்து அம்மனுக்கு லட்சாா்ச்சனையும், இரவு அலங்கார தீபாராதனை... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக உள்ளது: அப்துல் சமது எம் எல் ஏ

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மேம்பட்டு உள்ளது என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல் சமது. கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பிட் இந்தியா இயக்க விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

பிட் இந்தியா இயக்கம் குறித்து கோவில்பட்டியில் அஞ்சல்காரா்கள் சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பயணம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த சைக்கிள் பயணத்திற்கு கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ... மேலும் பார்க்க

சிறுவா்களிடம் கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் சிறுவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசிகளை பறித்துச் சென்றதாக இளம்சிறாா் உள்பட 3 பேரை புதுக்கோட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி லெவிஞ்சிபு... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சட்ட விழிப்புணா்வு

சாத்தான்குளத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிக் குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞா் வேணுகோபால் பங்கேற... மேலும் பார்க்க