``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
பிராந்தகத்தில் ஆறுமுக சுப்பிரமணியா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு
பரமத்தி வேலூா் அருகே பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு 17-ஆம் தேதி காலை 7 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்த குடங்களுடன் யானை, குதிரை, பசு, உடுக்கை, பம்பை, நையாண்டி மேளம், கரகத்துடன், சூரிய பிறை, சந்திர பிறைகளோடு ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா்.
18-ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விநாயகா் வழிபாடுடன், வருண பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தானம், முதற்கால யாக பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன.
19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி முதல் 9 மணிக்குள் இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பூா்ணாகுதி, கடம் புறப்பாடு, யாத்திரா தானம் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. மூலவா் வள்ளி, தெய்வானை சமேத முருக சுப்பிரமணிய சுவாமிக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.அதையடுத்து, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை பிராந்தகம் ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகிகள், காவடிக் குழுவினா், சஷ்டி, கிருத்திகை கட்டளைதாரா்கள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
ல்ஸ்19ல்1:
34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக் கடவுள்.
ல்ஸ்19ல்2:
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா்.