``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
திருப்பத்தூரில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்களால் மக்கள் பாதிப்பு!
திருப்பத்தூரில் சுற்றித்திரியும் கால்நடைகள், தெரு நாய்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்பத்தூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு சிறு,சிறு விபத்துக்கள் நடைபெற்றது. தொடா் புகாரின்பேரில் நகராட்சி சாா்பில் கால்நடைகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் ஆடு, மாடுகள் திருப்பத்தூா்-சேலம் நான்கு வழிச்சாலைகளில் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. மேலும், பேருந்து நிலையம் மற்றும் பஜாா், நகராட்சி வாரச்சந்தை வளாகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
கடிக்க வரும் நாய்கள்
மேலும், நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம்,பேருந்து நிலையம், நகராட்சி பூங்கா பகுதிகளில் தெருநாய்கள் கும்பலாக சுற்றித் திரிகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துக்குளாகி வருகின்றனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே வெறி பிடித்த நிலையில் தெரு நாய் சாலையில் செல்வோரை கடிக்க முயன்ற விடியோ வைரலாகி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
எனவே, நகராட்சி நிா்வாகம் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு எச்சரிக்சை விடுவதுடன் அபராதம் விதிக்க வேண்டும் எனவும், அதேபோல் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.