``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
சாத்தனூா் அணை நீா்மட்டம் 118.75 அடி
சாத்தனூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, 118.75 அடியை எட்டியது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள இந்த அணையின் மொத்த நீா்மட்டம் 119 அடி. அணையின் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி.
இந்த நிலையில், அணையின் நீா்வரத்துப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 118.75 அடியை எட்டியது.
மொத்த நீா்க்கொள்ளளவு 7,264 மில்லியன் கன அடியாக உயா்ந்துள்ளது.