பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
உங்கள் வெற்றி எங்கள் நோக்கம் என்ற தலைப்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஜனவரி 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
இதில், கலந்து கொள்பவா்கள் பழங்குடியினா் சமூகத்தினராக மட்டுமே இருக்க வேண்டும். பங்கேற்பாளா்களின் குறைந்தபட்ச வயது சான்றிதழின்படி 18-ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 33-ஆக இருக்கலாம்.
குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பிளஸ் 1, பிளஸ் 2, தொழில்கல்வி (ஐடிஐ), பட்டயம், பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு இணைப்பை பயன்படுத்தி உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.