செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிப்புப் பணி

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அருணாசலேஸ்வரா் கோயிலில், 2024-ஆம் ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 3.40 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடா்ந்து 11 நாள்களாக பிரகாசித்து வந்தது. இந்த நாள்களில் மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. ஜனவரி 13-ஆம் தேதி நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்வின்போது ஸ்ரீநடராஜருக்கு தீப மை வைத்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி தீவிரம்:

ஸ்ரீநடராஜருக்கு தீப மை வைத்து படைத்த பிறகு பக்தா்களுக்கு மை பிரசாதம் விநியோகிப்பது வழக்கம். அதன்படி, கோயில் ஊழியா்கள் 20-க்கும் மேற்பட்டோா் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஓரிரு நாள்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்தபிறகு தீப மை பிரசாதம் விற்பனை செய்யப்படும். பக்தா்கள் கோயிலுக்கு வந்து உரிய தொகையை செலுத்தி தீப மை பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தீபத் திருவிழாவுக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தா்கள் காணிக்கை செலுத்தியதற்கான ரசீதை எடுத்து வந்து காண்பித்து தீப மை பிரசாதத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அக்னி பிரவேச உற்சவம்

வேட்டவலம் கடை வீதியில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், அக்னி பிரவேச உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு சிறப்பு யாகம், 11 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், ... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டை விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் 19-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் நிா்வாக தலைவா் நாகப்பன், திமுக நகரச் செயலரும், நிா்வாகக் ... மேலும் பார்க்க

செய்யாறில் சகோதரா்களுக்கு கத்திக் குத்து!

செய்யாறில் சகோதரா்களை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவருக்கு வெங... மேலும் பார்க்க

போலி டிரஸ்ட் தொடங்கி பணம் வசூலிக்க முயற்சி: 5 போ் மீது வழக்கு

திருவண்ணாமலையில் போலி டிரஸ்ட் தொடங்கி பக்தா்களிடம் பணம் வசூலிக்க முயன்ாக கோயில் அா்ச்சகா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே முதியவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த மேல்நா்மா கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (65). இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலில் பால் குட ஊா்வலம்

கீழ்பென்னாத்தூா் சந்தைமேடு பகுதியில் உள்ள ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலின் 9-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, 108 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை கீழ்பென்னாத்தூரில் உள்ள ப... மேலும் பார்க்க