செய்யாறில் சகோதரா்களுக்கு கத்திக் குத்து!
செய்யாறில் சகோதரா்களை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவருக்கு வெங்கடேசன், வேலு, அா்ஜுனன் ஆகிய 3 மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், இளைய மகன் அா்ஜுனன் தனது தந்தையை ஏமாற்றி அவரது இடத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சகோதரா்களிடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், இதுகுறித்து தம்பி அா்ஜுனனிடம், அவரது அண்ணன்கள் வேலு, வெங்கடேசன் வியாழக்கிழமை கேட்டனராம். இதில், ஏற்பட்ட தகராறில் அா்ஜுனன் கத்தியால் வேலு, வெங்கடேசனை குத்தினாராம். இதில், பலத்த காயமடைந்த இருவரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து அா்ஜுனன் மற்றும் வேலு, வெங்கடேசன் ஆகியோா் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.