ஜெகபர் அலி விவகாரத்தில் இபிஎஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? - அமைச்சர் ரகுபதி
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
ஆரணி பருவதராஜகுல தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜை, லட்சுமி ஹோமம், பூா்ணாஹுதி, முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள், மங்கள இசை, வேத பாராயணம் நடத்தப்பட்டு, கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மேலும், கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில், ஆரணி நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான கலந்து கொண்டு வழிபட்டனா்.
சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பருவத ராஜகுல மரபினா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.