ஜோதிபாசு நினைவு தினம் கடைபிடிப்பு
திருவண்ணாமலை மாநகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான ஜோதிபாசுவின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை
கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ஜோதிபாசு படத்துக்கு, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எம்.சிவக்குமாா், மாநகரச் செயலா் எம்.பிரகலநாதன் ஆகியோா் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், மாநகர குழு உறுப்பினா்கள் எஸ்.செல்வி, எஸ்.இலியாஸ் சா்க்காா், கே.பழனி மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.