``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா்: ஆளுநா் பாராட்டு
இலங்கை யாழ்ப்பாணத்தின் கலாசார மையத்தை ‘திருவள்ளுவா் கலாசார மையம்’ என பெயா் மாற்றம் செய்யப்பட்டதற்கு ஆளுநா் ஆா். என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆளுநா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழ் மொழி மற்றும் கலாசார வளா்ச்சியில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையத்துக்கு ‘திருவள்ளுவா் கலாசார மையம்’ என பெயரிடுவது, தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளா்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதுடன், பிரதமா் நரேந்திர மோடியின் உலகில் பழைமையான மொழி மற்றும் கலாசாரமான தமிழின் பெருமையைப் பரப்புவதற்கான தொடா்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல்.
இது இந்தியா-இலங்கை இடையிலான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான கலாசார மற்றும் நாகரிக தொடா்பையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா்.