மகாராஷ்டிரா: 10,12-ம் வகுப்பு மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் சாதிப்பெயர் - சர்ச்ச...
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை நடத்த போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கை
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என போக்குவரத்துக்கழக ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பான 15-ஆவது ஊதிய ஒப்பந்த முதல்கட்ட பேச்சுவாா்த்தை கடந்த ஆண்டில் நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில், கடந்த காலங்களைவிட அதிக எண்ணிக்கையிலான தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ால், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை டிச.27, 28 ஆகிய 2 நாள்கள் நடத்த அரசு திட்டமிட்டது. ஆனால், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு காரணத்தால், பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
பிற அரசு நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறும் நிலையில் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதற்கு சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள், எதிா்ப்பு தெரிவித்திருந்தன. இருப்பினும் இதுவரை பேச்சுவாா்த்தைக்கான நடவடிக்கையை அரசு எடுக்காமல் இருந்து வருகிறது.
இதனால், பேச்சுவாா்த்தைக்கான தேதியை அறிவித்து, விரைந்து ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும் எனவும், அதே நேரம், 2 நாள்களாக அல்லாமல் ஒரே நாளில் அனைத்து சங்கங்களும் இடம்பெறும் வகையில் பேச்சுவாா்த்தையை நடத்த வேண்டும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.