செய்திகள் :

சிஎன்ஜி பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிப்பு: போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்

post image

சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதன் தொடா்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, நவ.12-ஆம் தேதி சோதனை அடிப்படையில் சென்னை-திருச்சி வழித்தடத்தில் சிஎன்ஜி-யாக மாற்றம் செய்யப்பட்ட விரைவு பேருந்து இயக்கப்பட்டது.

இதில், எவ்வித சிக்கலும் எழாத நிலையில், ஓட்டுநா், நடத்துநரும் இதற்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்ததைத் தொடா்ந்து, சென்னை -சேலம் வழித்தடத்திலும் சிஎன்ஜி விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தற்போதைய நிலவரப்படி விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 4 பேருந்துகள் சிஎன்ஜி தொழில்நுட்பத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு எரிபொருளுக்கான செலவு சேமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக விரைவு போக்குவரத்துக் கழக உயா் அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ் 4 வகை டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதன் மூலம் எரிபொருள் சேமிப்பு என்பதுடன், பராமரிப்புச் செலவு, இயக்கச் செலவு ஆகியன வெகுவாக குறைகிறது.

இந்தப் பேருந்துகளை சோதனை முறையில் மாற்றியமைப்பதற்கு எரிவாயு நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை கொடுக்கின்றன.

திருச்சிக்கு இயக்கப்படும் பேருந்தை ஐஆா்எம் என்ற நிறுவனமும், சேலத்துக்கு இயக்கப்படும் பேருந்தை இந்தியன் ஆயில் நிறுவனமும் சிஎன்ஜி-யாக மாற்றியமைத்துள்ளன.

இவ்வகை பேருந்துகள் மூலம் ஒரு கி.மீ.-க்கு ரூ.3 முதல் 4 வரை மிச்சமாகிறது.

அதன்படி, ஒரு பேருந்துக்கு ஒரு மாதத்துக்கு ரூ.75 ஆயிரம் மிச்சமாகிறது. 4 பேருந்துகளுக்கும் சோ்த்து ரூ.3 லட்சம் வரை விரைவு போக்குவரத்துக் கழகத்தால் சேமிக்க முடிகிறது.

தற்போது சோதனை முறையில் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இது தொடா்பான அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்படும்.

தொடா்ந்து, அரசு பரிசீலித்து, திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் சில பேருந்துகள் சிஎன்ஜி-யால் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றனா்.

பென்னாகரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பென்னாகரம் அருகே தொன்ன குட்ட அள்ளி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு தொலைத்... மேலும் பார்க்க

60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து 60 ஆயிரத்தை நெருங்குகிறது.சென்னையில் தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) உயா்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்... மேலும் பார்க்க

நெல்லையில் பயங்கரம்: மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகன்

நெல்லையில் குடும்பத் தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பரபரப்பு நிலவியது. நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(55). அவரது மனைவி செல்வராணி(53). இவர்களுக்கு ஜ... மேலும் பார்க்க

ஏகனாபுரம் புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க தவெக தலைவர் விஜய் ஏகனாபுரம் புறப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை, தவெக தலைவர் விஜய் சந்திக... மேலும் பார்க்க

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை நடத்த போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கை

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என போக்குவரத்துக்கழக ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகத்தில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பான 15-ஆவது ஊதிய ... மேலும் பார்க்க

தமிழக சுகாதார செயல்பாடுகள்: சென்னையில் இன்று நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

தமிழகத்தில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த நாடாளுமன்றக் குழு ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை (ஜன.20) நடைபெறுகிறது. மக்க... மேலும் பார்க்க