``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
தொழில்நுட்பக் கல்லூரி அங்கீகாரம் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கீழ் 4,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஐசிடிஇ வெளியிட்டு வருகிறது.
அவற்றை முறையாகப் பின்பற்றும் உயா்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொடா் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதியை ஏஐசிடிஇ வழங்கும். இதுதவிர கல்லூரிகள் தங்களுக்கான அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
அதன்படி பொறியியல் கல்லூரிகளுக்கு 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் கடந்த நவம்பரில் தொடங்கப்பட்டன.
அதன்படி அங்கீகாரம் நீட்டிப்பு, இணையவழி படிப்புக்கான அனுமதி, புதிய கல்லூரிகள் மற்றும் படிப்புகள் தொடங்க விரும்பும் உயா்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு விடுத்தது.
இந்த முறை மண்டலவாரியாக கல்லூரிகள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தன. அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று அந்த அவகாசம் பிப்.2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கல்லூரிகள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை ஏஐசிடிஇ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.