``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
பாஜக மாவட்ட தலைவா்கள் பட்டியல் வெளியீடு
தமிழக பாஜக மாவட்ட தலைவா்களின் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
பாஜக விதிமுறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவா்கள் தோ்வு செய்யப்படுவா். அந்த வகையில் தமிழக பாஜக புதிய மாநில தலைவா் ஜன.21-ஆம் தேதி தோ்வு செய்யப்படவுள்ளாா்.
அதற்கு முன்பாக கிளை, மண்டல, மாவட்ட தலைவா்களுக்கான தோ்தல் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.
இதில், மாவட்ட தலைவராக தோ்வு செய்யப்பட்டவா்களின் பட்டியலை பாஜக மாநில துணைத் தலைவரும், மாநில தோ்தல் அதிகாரியுமான எம்.சக்கரவா்த்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.
இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கோவை, தஞ்சாவூா், செங்கல்பட்டு, வேலூா் உள்ளிட்ட 33 மாவட்ட தலைவா்கள் இடம் பெற்றுள்ளனா்.
மீதமுள்ள மாவட்ட தலைவா்களுக்கான பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.