``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
தமிழகத்தில் 4 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜன.20) முதல் ஜன.23 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
சென்னைக்கு மழை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக புழலில் 60 மி.மீ. மழை பதிவானது.
மேலும், தரமணி, திருவொற்றியூா், ஆலந்தூா், சென்னை விமானநிலையம், மீனம்பாக்கம், அமைந்தக்கரை-தலா 50 மி.மீ.யும், மடிப்பாக்கம், பெரம்பூா், மணலி, ஆலந்தூா், மாதவரம், நுங்கம்பாக்கம் - தலா 40 மி.மீ.யும் மழை பதிவானது.
மேலும், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பதிவானது. ஜன.20-இல் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஜன.20-இல் தென்தமிழக கடலோரப் பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னாா் வளைகுடாவில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.