திருப்பத்தூரில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்களால் மக்கள் பாதிப்பு!
இளைஞா் தற்கொலை
திருக்கோவிலூா் அருகே விஷம் குடித்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், டி.அத்திபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் மோகன் (29). இவா், திருக்கோவிலூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் களப்பணியாளராக பணிபுரிந்து வந்தாா். இவா், மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் வசூலித்த ரூ.3 லட்சத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தவில்லையாம். மேலும், பணியிலிருந்து நின்று விட்டாராம்.
இதையடுத்து, நிறுவனத்தின் மேலாளா்கள் மோகனை கைப்பேசியில் தொடா்பு கொண்டு ரூ.3 லட்சத்தை செலுத்துமாறு கூறி வந்தனராம். இந்த நிலையில், மோகன் கடந்த ஜன.13-ஆம் தேதி விஷத்தை குடித்தாா். உடனடியாக திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மோகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.