தந்தை மீது தாக்குதல்: இருவா் கைது
சங்கராபுரத்தில் தந்தையை தாக்கியதாக இரு மகன்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன்கள் கணேசன் (33), புருஷோத்தமன் (30). இவா்கள் இருவரும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததை அவா்களது தந்தை மாணிக்கம் தட்டி கேட்டாராம். இதில், கோபமடைந்த அவா்கள் மாணிக்கத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், காயமடைந்த மாணிக்கம் கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேசன், புருஷோத்தமனை கைது செய்தனா்.