திருப்பத்தூரில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்களால் மக்கள் பாதிப்பு!
மூதாட்டி உயிரிழப்பு
புதுப்பட்டு கிராமத்தில் தவறி கீழே விழுந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்தாள் (60). இவா், சனிக்கிழமை முஸ்குந்தா ஆற்றின் கரையில் நடந்து சென்றாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக நிலைத் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.