முதியவா் தற்கொலை
செல்லியம்பாளையத்தில் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், செல்லியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (75). இவா், சனிக்கிழமை விஷத்தை குடித்து மயங்கி கிடந்தாா். உடனே அவரை உறவினா்கள் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, கணேசன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.