கோவை: ரேஷன்அரிசியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை - பதறிய வட மாநில தொழிலாளர்...
இலுப்பூர் பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து
இலுப்பூரில் பூட்டியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள இலுப்பூர் பெருமாள் கோயில் கிழக்கு அக்ரஹாரத்தில் வசிப்பவர் கண்ணன். இவர் பணி நிமித்தமாக குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில் நள்ளிரவு ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென எரியத் தொடங்கியது.
பின்னர் தீ மள மளவென்று வீடு முழுவதும் பரவியது. நள்ளிரவு நேரம் என்பதால் சற்று தாமதமாக அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், வீரர்கள் நிகழ்விடம் வரும் முன்னரே வீட்டுக்குள்ளிருந்த இரண்டு எரிவாயு உருளையில் ஒன்று தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் வெடித்துச் சிதறியது.
குறைவாகவே கடன் பெற்றுள்ளோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்த சத்தம் குடியிருப்பு பகுதி முழுவதும் கேட்டுள்ளது. இதனால் மேலும் பதற்றம் குடியிருப்புவாசிகள் மத்தியில் தொற்றியது. இந்த நிலையில் நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் நிகழ்விடம் வந்தனர். இதையடுத்து உள்ளிருந்த மற்றொரு சிலிண்டரை நீளமான இரும்பு பைப் கொண்டு வெளியில் இழுத்து வெடிக்காத வண்ணம் ஈரத்திலான சாக்குபை போட்டு குளிரூட்டினர்.
தொடர்ந்து, நீரை முழுவதுமாக பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் சமயோசிதமாக செயல்பட்டு சிலிண்டரை வெளியில் எடுத்ததால் பதற்றம் சற்று தணிந்தது. இருப்பினும், நள்ளிரவு நேரிட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமாக காணப்பட்டது.