``நாங்களும் விமானத்தில் பறக்க வேண்டும்'' -அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசையை நிறைவேற்ற...
காஜியாபாத்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி
காஜியாபாத் வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி பெண் உட்பட 4 பேர் பலியானார்கள்.
இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி ராகுல் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்கசிவு காரணமாக வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 32 வயதான பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியானார்கள்.
அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட போது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். தீயை அணைத்த பிறகு, தீயணைப்பு வீரர்கள் வீட்டினுள் இருந்து உடல்களை மீட்டனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்
பலியானவர்கள் குல்பஹர் (32) மற்றும் அவரது இரண்டு மகன்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் அதே வீட்டில் வசிக்கும் உறவினரின் மகனும் அடங்குவார் என்றும் பெண்ணின் கணவர் ஷாநவாஸ் காயமின்றி தப்பினார் என்றும் தெரிவித்தார்.