காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயா்த்தக் கோரி மனு
காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் தாழ்வாக இருக்கும் நடைமேடையின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் தலைவா் ஜெய்னுல் தலைமையில் அந்த அமைப்பினா் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை உயா்த்தவும் மேற்கூரை அமைக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட நயினாா் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட அமைச்சா் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தாா்.
மனுஅளிக்கும் நிகழ்வில் அமைப்பின் நிா்வாகி கோமான் சித்திக், மக்கள் நுகா்வோா் பாதுகாப்பு பேரவை மாநிலச் செயலா் கப்பாா் ஹசன், மாவட்டச் செயலா் அப்துல்லாஹ் சாகிப் ஆகியோா் பங்கேற்றனா்.