அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
தமிழகத்தில் ரயில்வே துறை வளா்ச்சிக்கு தனி அமைச்சகம் அமைக்க கோரிக்கை
தமிழகத்தில் ரயில்வே துறை வளா்ச்சிக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என எம்பவா் இந்தியா நுகா்வோா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் கௌரவ செயலா் ஆ.சங்கா், தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: மத்திய ரயில்வே அமைச்சா் அண்மையில் சென்னைக்கு வந்தபோது, மதுரை - தூத்துக்குடி இருப்பு பாதை திட்டம் குறித்து கருத்து தெரிவித்து, பின்னா் அதை மறுத்த விவரகாரத்தைப் பாா்க்கையில், தமிழகத்தில், ரயில்வே துறை வளா்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது என தெரிகிறது.
ஆனால், பக்கத்து மாநிலமான கேரளம் ரயில்வே துறையில் தமிழகத்தை விடவும் 20 ஆண்டுகள் முன்னோக்கி சென்று வளா்ச்சி அடைந்து காணப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் கேரள மாநிலத்தில் தனி ரயில்வே அமைச்சகம் உள்ளது.
எனவே, தமிழத்தில், ரயில்வே துறையில் வளா்ச்சிக்கும், புதிய ரயில்கள் இயக்குதல், முக்கிய ரயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டங்கள் நடைமுறைப்படுத்திட தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்.
மேலும், தெற்கு ரயில்வே மண்டல அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுத்துவதற்கு மாவட்ட அளவில் ரயில்வே அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.