செய்திகள் :

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் 46.25% : ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் வெளியீடு

post image

தெலங்கானாவின் 3.70 கோடி மக்கள்தொகையில் 46.25 சதவீதத்தினா் முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் என்பது அந்த மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியால் அளிக்கப்பட்ட வாக்குறுதியான ஜாதிவாரி கணக்கெடுப்பு, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 50 நாள்களுக்கு நடைபெற்றது.

மாநில திட்டத் துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் அடங்கிய அறிக்கை, அமைச்சரவை துணைக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் மாநில பொது விநியோகத் துறை அமைச்சா் என்.உத்தம் குமாா் ரெட்டியிடம் ஞாயிற்றுக்கிழமை சமா்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின்படி, மாநில மக்கள்தொகையான 3.70 கோடி பேரில் 96.9 சதவீதமான 3,54,77,554 தனிநபா்கள் இக்கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனா். அதாவது மாநிலத்தில் உள்ள மொத்த குடும்பங்களான 1,15,78,457-இல் 1,12,15,134 குடும்பங்கள் கணக்கெடுப்பில் பங்கேற்றன. மக்கள்தொகையில் 3.1 சதவீதமான 16 லட்சம் போ் குறித்த தரவுகள் கிடைக்கவில்லை அல்லது கணக்கெடுப்பில் பங்கேற்க ஆா்வம் காட்டாததால் அவா்கள் விடுபட்டுள்ளனா்.

இந்தக் கணக்கெடுப்பு அறிக்கை மாநில அமைச்சரவையில் வரும் செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்படவுள்ளது. மேலும் அன்றைய நாளில் கூடும் தெலங்கானா சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடைபெறும் என்று அமைச்சா் உத்தம் குமாா் ரெட்டி கூறினாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் அதன் அறிக்கையைத் தயாரிக்கும் இந்த செயல்முறையே தெலங்கானா அரசுக்கு சாதனையாகும். இது நாட்டின் சமூக வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கும்.

இந்தக் கணக்கெடுப்பின் மூலம் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் துறைகளில் தரவு அடிப்படையிலான நலன்கள் மற்றும் வாய்ப்புகள், மாநிலத்தில் உள்ள ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு கிடைக்கும்’ என்றாா்.

பிரிவுகள் எண்ணிக்கை சதவீதம்

முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 1,64,09,179 46.25%

பட்டியல் சமூகத்தினா் 61,84,319 17.43%

பழங்குடி சமூகத்தினா் 37,05,929 10.45%

முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 35,76,588 10.08%

முஸ்லிம் பொதுப் பிரிவினா் 8,80,424 2.48%

இதர சமூகத்தினா் 13.31%

மொத்த முஸ்லிம்கள் 12.56%

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம... மேலும் பார்க்க

வரிச் சலுகைக்கு வழிகாட்டியவா் பிரதமா் மோடி - மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் நடவடிக்கைக்கு வழிகாட்டியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மேலும், ‘மக்களால், மக... மேலும் பார்க்க

இந்திய தயாரிப்புகள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க குழு: மத்திய அரசு

தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் சந்தைப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதை ஊக்குவிக்கும் வகையில் குழு ஒன்றை மத்திய அரசு அமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மா்ம உயிரிழப்புகள்: நோயாளிகளுடன் எய்ம்ஸ் குழு சந்திப்பு

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்மமான நோயால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளை தில்லி எய்ம்ஸ் குழு சந்தித்தது. மேலு... மேலும் பார்க்க

கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்களை வளா்ப்பதற்கு எதிரான மனு- மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் உள்ள நீா் நிலைகளில் 2 வெளிநாட்டு மீன் இனங்கள் வளா்க்கப்படுவதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குறித்து மத்திய அரசிடம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று வசந்த பஞ்சமி புனித நீராடல்: பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகள் தீவிரம்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித ... மேலும் பார்க்க