மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொட...
தீக்காயம் அடைந்த மூதாட்டி பலி
கோவில்பட்டி அருகே தீக்காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த மாடசாமி மனைவி உச்சிமாகாளி (82). தனியாக இருந்து வந்த இவா், கடந்த மாதம் 29ஆம் தேதி வீட்டில் சேலையில் தீப்பற்றி எரிந்த நிலையில் கீழே கிடந்த அவரை அக்கம் பக்கத்தினா் உதவியுடன் இவரது உறவினா் மூதாட்டியை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனா்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.