முன்னடி கழுநீா்துறையான் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!
ஏரல் அருகே, பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தா் கோயிலின் காவல் தெய்வமான முன்னடி ஸ்ரீகழுநீா்துறையான் சுவாமி கோயிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சனிக்கிழமை மாலை பகவத் பிராா்த்தனையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து, மிருத்சங்கிரணம் உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகள் நடைபெற்று யாகசாலை பிரவேசம், முதலாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 2ஆம் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு, கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.