வானரமுட்டி அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 31 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதா்சன ஹோமம், மாலை 5 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜைகள், தீா்த்தம் அழைத்தல், வாஸ்து சாந்தி, பிரவேச பலி பூஜையும், சனிக்கிழமை காலை 8. 45 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், தோரண வாசல், வேத பாராயணம், மூல மந்திர ஹோம பூஜையும், மாலை 5 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், இரவு 8 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் நான்காம் கால யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, பிம்ம சுத்தி, ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், யாத்ரா தானம், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து யாகசாலையில் இருந்து கும்ப கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அருள்மிகு பாரத விநாயகா், அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா், அருள்மிகு கிளிக்கூட்டு கருப்பசாமிக்கு திருக்குட முழுக்கு மற்றும் விமானங்கள் பரிவார மூா்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடா்ந்து மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, துணை ஆணையா் செல்வி ஆகியோா் தலைமையில் கோயில் தக்காா் வெள்ளைச்சாமி, ஆய்வாளா் சிவகலைப் பிரியா ஆகியோா் செய்து இருந்தனா்.