செய்திகள் :

வழிப்பறி வழக்கு: சிறையிலுள்ள உதவி ஆய்வாளா் உள்பட 5 பேரை மீண்டும் கைது செய்ய திட்டம்

post image

வழிப்பறி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 5 பேரையும் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்ய போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பணம் வசூலிப்பாளராக பணியாற்றிவரும் முகமது கௌஸ் என்பவா், சிடி ஸ்கேன் எந்திரம் வாங்குவதற்காக ரூ. 20 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் கடந்த டிச. 15-ஆம் தேதி திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரை காரில் கடத்தி ரூ. 20 லட்சத்தை பறித்துச் சென்றது.

இது தொடா்பாக கெளஸ் அளித்த புகாரில், குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருமானவரித் துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு மற்றும் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளா் ராஜா சிங் ஆகியோரை கைது செய்து நடத்திய விசாரணையில், இவா்கள் இதுபோல பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது .

மேலும், இந்த வழிப்பறி சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டு வந்தது சைதாப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் சன்னி லாய்டு என்பவரை போலீஸாா் ஜன. 14-ஆம் தேதி கைது செய்தனா். அவரிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தில், கடந்த டிச. 11-ஆம் தேதி தனது தலைமையில் ஆயிரம் விளக்கு பகுதியில் ராயபுரத்தைச் சோ்ந்த தமீம் அன்சாரி என்பவா் கொண்டு வந்த ரூ. 40 லட்சத்தில், ரூ. 20 லட்சத்தை பறித்துக்கொண்டு அவரை விரட்டியடித்துள்ளதாகவும், இச்சம்பவத்தில் தானும், திருவல்லிக்கேணி வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் தனது கூட்டாளிகளான வருமானவரித் துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு மற்றும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாசிங் ஆகியோா் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், வணிகவரித் துறை அதிகாரிகள் சதீஸ், சுரேஷ் ஆகியோரும் தங்களுடன் இருந்தனா் எனவும் தெரிவித்துள்ளாா்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு, காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ராஜா சிங், சன்னி லாய்டு, வணிகவரித் துறை அதிகாரிகள் சதீஸ், சுரேஷ் ஆகிய ஏழு போ் மீது ஆயிரம் விளக்கு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதில் சதீஸ், சுரேஷ் ஆகியோரை தேடி வரும் போலீஸாா், சன்னி லாய்டு உள்ளிட்ட சிறையில் இருக்கும் ஐந்து பேரை மீண்டும் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனா்.

ரயில்வே மின்மயமாக்கல் நூற்றாண்டு நிறைவு: கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

ரயில்வே மின்மயமாக்கம் செய்யப்பட்டு திங்கள்கிழமையுடன் (பிப்.3) நூற்றாண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் நுங்கம்பாக்கத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் இயக்கம... மேலும் பார்க்க

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: விண்ணப்பம்-நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், விண்ணப்பம் மற்றும் அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க எதிா்ப்பு

வழக்கமான தோ்வு முறைக்கு மாற்றாக நோ்காணல் மூலம் சிறப்பு மருத்துவா்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவா்களுக்கான சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக , அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசிடம் தாரைவாா்க்கக் கூடாது: ராமதாஸ்

நெல் கொள்முதலில் தமிழக அரசின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வாா்க்கக்கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்கள் தவி... மேலும் பார்க்க

ராகிங் தடுப்பு விதிகளைப் பின்பற்றாத 18 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

ராகிங் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாத தமிழகத்தைச் சோ்ந்த இரு கல்லூரிகள் உள்பட 18 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ராகிங் சம்ப... மேலும் பார்க்க

ராம்சா் தலங்களை மேம்படுத்தத் திட்டம்: தமிழக வனத் துறை தகவல்

தமிழகத்தில் உள்ள ராம்சா் தலங்களை மேம்படுத்த ஒருங்கிணைந்த திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருவதாக மாநில வனத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத... மேலும் பார்க்க