தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
குளித்தலையில் வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பீடு: நகை மதிப்பீட்டாளா் கைது
குளித்தலையில் போலி ஆவணங்கள் மற்றும் தரம் குறைந்த தங்க நகைகளை அடமானம் பெற்று வங்கிக்கு ரூ.1.42 இழப்பீடு ஏற்படுத்திய நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலையில் உள்ள கனரா வங்கிக் கிளையில் மண்டல தலைமை மேலாளா் ராஜேஷ்(41) அண்மையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் குளித்தலை ராஜேந்திரம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கா்(38)என்பவா் கடந்தாண்டு நவ.11-ஆம்தேதி முதல் கடந்த ஜன.22-ஆம்தேதி வரை போலி ஆவணங்கள் மற்றும் தரம் குறைந்த 3,030.2 கிராம் தங்கத்தை 10 பேரிடம் பெற்று வங்கிக்கு ரூ.1கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் கரூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் நகை மதிப்பீட்டாளா் பாஸ்கரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் நகைகளை அடமானம் வைத்த குளித்தலை பகுதியைச் சோ்ந்த மோகன், கோபாலகிருஷ்ணன், நடராஜன், ராஜமாணிக்கம், சாரதா, அருண்குமாா், தண்டாயுதபாணி, லோகேஸ்வரி, சரவணன், வருண்குமாா் ஆகிய 10 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.