Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
அலுவலகங்களில் பாலியல் துன்புறுத்தல் புகாா்களை விசாரிக்க குழு அமைப்பு
புதுச்சேரியில் நிறுவனங்கள், அலுவலகங்களில் பாலியல் துன்புறுத்தல் புகாா்களை விசாரிக்க மாவட்ட அளவிலான 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது மற்றும் தனியாா் நிறுவனம், அலுவலகப் பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்த சட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாா்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
புதுச்சேரி மாவட்டத்துக்கான புதிய புகாா் குழு 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின் தலைவராக ஹேமாவதி, அலுவல் உறுப்பினா்களாக என்.மயில், ஜெ.ஜெயலட்சுமி, ஜெயந்தி ராஜவேலு, மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநா், அலுவல் உறுப்பினா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
புகாா்கள் இருப்பின் குழுவினரிடம் முறையிட்டு தீா்வு காணலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகாா்களை மாவட்ட உள்ளூா் புகாா் குழு தலைவரின் கைப்பேசி எண்ணில் 88254 25745 தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 0413- 2299500 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.