இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை! மின் உற்பத்தி சாத்தியமா?
சீனாவின் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டக்டிவ் டோகாமாக் பரிசோதனையின் முன்னேற்றமாக அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
சீனா பல்வேறு துறைகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்து 10 கோடி செல்சியஸ் வெப்பநிலையில் நீடிக்கும் செயற்கை சூரியனை உருவாக்கி, வெற்றிபெற்றுள்ளது. இதிலிருந்து மின் உற்பத்தி சாத்தியமானால், அது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படும்.
அணு உலை வெற்றிகரமாக பிளாஸ்மாவை 1,000 விநாடிகள் தாங்கி சாதனை படைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த 2023 இல் அதன் முந்தைய சாதனையான 403 விநாடிகள் (17.76 நிமிடங்கள்) என்ற சாதனையை முறியடித்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா சுமார் 1,000 விநாடிகள் நீடித்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த முறை 403 வினாடிகள் தான் நீடித்துள்ளது. எனவே இது புதிய உலக சாதனை என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.
சூரியனின் ஆற்றல் உற்பத்தியைப் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்ட அணுக்கரு இணைவு எனும் நியூக்ளியர் ஃப்யூஷன் மூலம் ஆற்றலை தயாரிக்க, செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சி விஞ்ஞானிகளுக்கு நீண்டகால இலக்காக இருந்து வருகிறது,
ஆனால் செயற்கை சூரியனுக்கு 10 கோடி டிகிரி செல்சியஸுக்கு மேல் தேவையான வெப்பநிலையை அளிப்பது மற்றும் அதனை தொடர்ந்து செயற்கை சூரியனுக்கு அளிப்பது, அதனை பராமரிப்பது எப்போதும் ஒரு சவாலாக உள்ளது. இந்த நிலையில்தான், செயற்கை சூரியனுக்கு 1,000 விநாடிகளுக்கு கணினியை நிலைநிறுத்தியிருப்பதன் மூலம், இணைவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான சாதனயை எட்டியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் கீழ் ஒளி அணுக்களை இணைக்கும் சூரியனின் செயல்முறையைப் பிரதிபலிப்பதன் மூலம் அணுக்கரு இணைவு செயல்படுகிறது, இது கனமான அணுக்களை உருவாக்குகிறது, இது ஆற்றலை வெளியிடுகிறது என்பதே ஆராய்ச்சியின் அடிப்படை.
2006ஆம் ஆண்டு முதல் சீன ஆய்வாளர்கள் இந்த ஈஸ்ட் எனப்படும் செயற்கை சூரியன் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நியூக்ளியர் ஃப்யூஷன் மூலம் மின் உற்பத்தி செய்ய முடிந்தால், அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.