புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விச...
‘உக்ரைன் போரில் 45,100 வீரா்கள் உயிரிழப்பு’
ரஷியாவுடன் சுமாா் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 45,100 வீரா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து யு-டியூப் ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவா் கூறியதாவது:
ரஷியாவுடன் நடைபெற்றுவரும் போரில் உக்ரைன் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 45,100 போ் உயிரிழந்துள்ளனா். இது தவிர, மோதலில் 3.9 லட்சம் வீரா்கள் காயமடைந்துள்ளனா் என்றாா் அவா்.