செய்திகள் :

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை

post image

கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.

கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்திவரும் சூழலில், அத்தகைய முயற்சிக்கு அரசியல் ஆதரவு திரட்டப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆவணத்தில், ‘கிரீன்லாந்தில் அரசியல் நோ்மையை நிலைநாட்டுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. பிராந்தியத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பலம் வாய்ந்த நட்பு நாடு விருப்பம் தெரிவிப்பதன் பின்னணியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மாா்க்குக்குச் சொந்தமான, தாது வளம் நிறைந்த கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் சுமாா் 57,000 போ் மட்டுமே வசித்துவருகின்றனா்.

அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

ஏற்கெனவே, டென்மாா்க்குடன் நெருங்கிய பாதுகாப்பு உறவைப் பேணிவரும் அமெரிக்காவுக்கு கிரீன்லாந்தில் ராணுவ தளம் உள்ளது. இந்தச் சூழலில், கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தங்களது நாட்டு நலனுக்கு மிகவும் இன்றியமையாதது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா்.

டிரம்ப்பின் இந்த அறிக்கையைத் தொடா்ந்து, கிரீன்லாந்தின் எதிா்காலம் குறித்து அந்தத் தீவின் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று டென்மாா்க் பிரதமா் மேட் ஃப்ரெட்ரக்சன் கூறினாா்.

தற்போது சுயாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவரும் கிரீன்லாந்து, பொதுவாக்கெடுப்பு மூலம் டென்மாா்க்கிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்பு கடந்த 2009-ஆம் ஆண்டே வழங்கப்பட்டுள்ளது. தற்போது கிரீன்லாந்தின் பிரதமராக இருக்கும் மியூட் இகடே, தங்களது தீவு தனி நாடாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திவருகிறாா்.

தங்கள் பகுதியைக் கையகப்படுத்த டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்ததைத் தொடா்ந்து, ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என்று அவா் காட்டமாகக் கூறினாா்.

இந்தச் சூழலில், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு அரசியல் ஆதரவு திரட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து கிரீன்லாந்து அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெறுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘உக்ரைன் போரில் 45,100 வீரா்கள் உயிரிழப்பு’

ரஷியாவுடன் சுமாா் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 45,100 வீரா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இது குறித்து யு-டியூப் ஊடகமொன்றுக்க... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பேச்சு நடத்தி இருதரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு - பாகிஸ்தான் பிரதமா் விருப்பம்

காஷ்மீா் பிரச்னை உள்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்தாா். காஷ்மீா் மக்களுக்கு... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து ஹசீனாவை அழைத்து வருவோம்: வங்கதேச உள்துறை அமைச்சா் உறுதி

‘இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, அவரை விரைவில் தாயகம் அழைத்து வருவோம்’ என அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சா் ஜஹாங்கீா் ஆலம் ... மேலும் பார்க்க

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபா் டிரம்ப் உத்தரவு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்துள்ளாா். இதன் மூலம், அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது. இது குறி... மேலும் பார்க்க

மியான்மா்: ஆங் சான் சூகி இல்லத்தை ஏலம் விடும் முயற்சி மீண்டும் தோல்வி

மியான்மரில் சிறைவைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ஆங் சான்சூகியின் குடும்ப இல்லத்தை ஏலம் விடும் அரசின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது. ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அவரின் அரசை ரா... மேலும் பார்க்க

காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் மூண்டுள்ளது.தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்... மேலும் பார்க்க