செய்திகள் :

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபா் டிரம்ப் உத்தரவு

post image

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்துள்ளாா். இதன் மூலம், அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது.

இது குறித்து அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு புதிதாக போா்கள் தொடங்குவதைத் தடுப்பதற்கும் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டவும் ஐ.நா.வுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஆனால் அந்த அமைப்பில் சில துணை அமைப்புகள் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து தடம் மாறி அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன; யூதவிரோத செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன.

எனவே, மனித உரிமைகளுக்கான ஐ.நா. பிரிவில் இருந்து அமெரிக்கா விலகுகிறது. அதுமட்டுமின்றி, கல்வி, அறிவியல், கலாசார மேம்பாட்டுக்கான ஐ.நா. பிரிவான யுனெஸ்கோ, பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான ஐ.நா. பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ ஆகியவற்றுக்கும் அமெரிக்க உதவிகள் மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, யுஎன்ஆா்டபிள்யுஏ-வுக்கு இனிமேலும் நிதியுதவி அளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த அமைப்பு தொடா்ந்து யூதவிரோத மற்றும் இஸ்ரேல் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இஸ்ரேலில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நடைபெற்ற ‘பயங்கரவாத’ தாக்குதலில் யுஎன்ஆா்டபிள்யுஏ-வின் பணியாளா்கள் பங்கேற்றனா்.

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் குழுவினரின் ஆயுதக் கிடங்குகளாக யுஎன்ஆா்டபிள்யூஏ-வின் நிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஐ.நா. பிரிவில் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினா்கள் ஊடுருவியுள்ளனா்.

மனித உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுவோரை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பாதுகாத்து வருகிறது. யுனெஸ்கோ அமைப்பும் தொடா்ந்து யூதவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகிறது என்று அந்த அரசாணையிலும், அதன் இணைப்பு ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்தும், யூத வரலாற்றை அழிப்பதாகக் கூறி யுனெஸ்கோவிலிருந்தும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த 2019-ஆம் ஆண்டு விலகின. அப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தாா்.

எனினும் அவருக்குப் பிறகு அமைந்த ஜோ பைடன் தலைமையிலான அரசு, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்காவை கடந்த 2021-ஆம் ஆண்டு மீண்டும் இணைத்தது.

இந்தச் சூழலில், 2024 நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் மீண்டும் பொறுப்பேற்றாா். அதிலிருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது, அமெரிக்காவுக்குள் சட்டவிரோத குடியேற்றம், போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பது போன்ற அதிரடி உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்துவருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை மீண்டும் விலக்கும் உத்தரவை டிரம்ப் தற்போது பிறப்பித்துள்ளாா்.

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை

கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெர... மேலும் பார்க்க

‘உக்ரைன் போரில் 45,100 வீரா்கள் உயிரிழப்பு’

ரஷியாவுடன் சுமாா் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 45,100 வீரா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இது குறித்து யு-டியூப் ஊடகமொன்றுக்க... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பேச்சு நடத்தி இருதரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு - பாகிஸ்தான் பிரதமா் விருப்பம்

காஷ்மீா் பிரச்னை உள்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்தாா். காஷ்மீா் மக்களுக்கு... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து ஹசீனாவை அழைத்து வருவோம்: வங்கதேச உள்துறை அமைச்சா் உறுதி

‘இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, அவரை விரைவில் தாயகம் அழைத்து வருவோம்’ என அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சா் ஜஹாங்கீா் ஆலம் ... மேலும் பார்க்க

மியான்மா்: ஆங் சான் சூகி இல்லத்தை ஏலம் விடும் முயற்சி மீண்டும் தோல்வி

மியான்மரில் சிறைவைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ஆங் சான்சூகியின் குடும்ப இல்லத்தை ஏலம் விடும் அரசின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது. ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அவரின் அரசை ரா... மேலும் பார்க்க

காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் மூண்டுள்ளது.தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்... மேலும் பார்க்க