செய்திகள் :

திருப்பத்தூர்: மக்கள் அச்சத்தை கவனப்படுத்திய விகடன்; கிணற்றைச் சுற்றி அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், குட்டிகாம்ப வட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ரெட்டியூரில் கிராம சாலையையொட்டி அமைந்திருக்கிறது அந்தக் கிணறு. பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் நடந்தும், சைக்கிளிலும், வாகனங்களிலும் செல்லும் அந்தச் சாலையின் மிக அருகில், தடுப்புச்சுவர்கூட இல்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கிறது அந்தக் கிணறு.

இது குறித்து அந்தப் பகுதியில் செல்பவர்களிடம் விசாரித்தபோது, அந்தக் கிணறு சில மாதங்களுக்கு முன்பாகத் தோண்டப்பட்டது தெரியவந்தது. கிணறு, சாலையின் அருகில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு நடவடிக்கை வேண்டும் என்றனர், அந்தப் பகுதி மக்கள்.

பாதசாரிகளும், பள்ளி மாணவர்களும் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள அந்த வழியைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில் அந்தக் கிணறு எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் திறந்தவெளியில் காணப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியது. அருகில் வீடுகள்கூட இல்லாத நிலையில், ஏதாவது நிகழ்ந்தால், உதவிக்குக்கூட உடனே யாரையும் அழைக்க முடியாத நிலையே இருந்தது.

அதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களில் இந்த இடத்தில் தண்ணீர் தேங்கும் அபாயமும் இருக்கிறது. மழைக்காலத்தில் மேலும் தெளிவில்லாத நிலை ஏற்படும். அப்போது வாகன ஓட்டிகள்கூட தவறி விழ வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இது குறித்து ரெட்டியூர் பஞ்சாயத்துத் தலைவர் மூர்த்தியிடம் பேசினோம். ``கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத்தான் அது தோண்டப்பட்டது. விவசாயத் தேவைகளுக்காக தனிநபரால், தனியார் இடத்தில் தோண்டப்பட்டிருக்கிறது. விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறதுதான். இது தொடர்பாக அந்த நபரிடம் பேசி தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருப்பத்தூர்: சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு... ஆபத்தை உணர்வார்களா?! என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும் இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். விகடன் செய்தி எதிரொலியாக வெளியூர் சென்றிருந்த உரிமையாளர் ஊர் திரும்பிய பிறகு உடனே விரைந்து ஆபத்தைக் கருத்தில் கொண்டு விரைந்து தடுப்புச் சுவர் கட்டியுள்ளார்.

கழுகார்: தலையில் அடித்துக்கொண்ட ‘ஜோதி’ அமைச்சர் `டு' கிராக்கி காட்டும் சமூகத் தலைகள் வரை..!

தலையில் அடித்துக்கொண்ட ‘ஜோதி’ அமைச்சர்!”“உத்தரவு போட்ட ‘ஷாக்’ அமைச்சர்...தமிழ்மொழியைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘மான்செஸ்டர்’ மாவட்டத்தில் பிரமாண்ட பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளைச்... மேலும் பார்க்க

`முருகன் மலையை காப்பாற்றும் போராட்டம்; திமுக அரசுக்கு முதல் அடி விழுந்துள்ளது'- இந்து முன்னணி தலைவர்

திருப்பூரில் நேற்று முன்தினம் காலை கைதுசெய்யப்பட்டதால், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்பாட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு இரவு 8 மணிக்கு மேல்தான் மதுரை வந்தார்.திரு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `சிலர் கலவரத்தைத் தூண்ட முயல்கிறார்கள்!' - அமைச்சர் ரகுபதி தாக்கு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க-விற்கு உறுதி செய்யப்பட்ட ... மேலும் பார்க்க

Rahul Gandhi: `சீனா 10 ஆண்டுகள் முன்னால் செல்கிறது...' - மோடியைச் சாடிய ராகுல்!

பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்ற உரையில் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து குறிப்பிடாததைச் சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் தள பக்கத்தில் பாஜக அரசை சாடியுள்ளார் ராகுல் காந்தி. ராகுல் தனது எக்ஸ் தள பதிவ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது" - சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு!

"திருப்பரங்குன்றத்து மக்களாலோ, இந்து அறநிலையத்துறை அல்லது தர்கா நிர்வாகத்தாலோ உரிமை சம்பந்தமான பிரச்னை எதுவும் இப்போது எழுப்பப்படவில்லை, பின்னர் பிரச்னையை எழுப்புவது யார்?..." என்று மதுரை நாடாளுமன்ற உ... மேலும் பார்க்க