பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக ந...
தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகி புதிய வரலாறு படைத்து வருகிறது.
தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையானது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை (பிப்.6) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,930-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகிறது.
கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ள நிலையில், தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க |சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி போதைப் பொருள் பறிமுதல்
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி நேற்றைய விலையில்(புதன்கிழமை) மாற்றமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,07,000-க்கு விற்பனையாகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முக்கிய நடவடிக்கைகள், பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாதது மற்றும் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.