லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
IRCTC: காசி கும்பமேளாவுக்கு தமிழகத்திலிருந்து கலந்துகொள்ளது எப்படி? - முழு தகவல்கள்
புகழ்பெற்ற காசி கும்பமேளாவுக்கு திருநெல்வேலியிலிருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்குவதாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா மிகவும் புகழ்பெற்றது. ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு கங்கை நதியில் புனித நீராட நாடு முழுவதுமிருந்து பல லட்சம் மக்கள் காசிக்குச் செல்கின்றனர்.
இந்த விழாவில் கலந்துகொள்ள தென்மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருநெல்வேலியிலிருந்து காசிக்கு சுற்றுலா ரயிலை இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இந்தச் சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியிலிருந்து பிப்ரவரி 5 ஆம் தேதி அதிகாலை 01.00 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு வந்து, மதுரையிலிருந்து அன்று காலை 6 மணிக்கு இந்த ரயில் பிப்ரவரி 7 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு காசி பனாரஸ் சென்று சேர்கிறது.
அன்று மாலை கங்கா ஆரத்தி பார்த்துவிட்டு மறுநாள் முழுவதும் பிராக்யாராஜ் பகுதியில் சுற்றுலா செல்லவும், பிப்ரவரி 9 ஆம் தேதி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், சாரநாத் கோயில்களுக்கு சென்றும், பிப்ரவரி 10 ஆம் தேதி அயோத்தியா சரயு நதி மற்றும் ராம ஜென்ம பூமி கோயிலில் வழிபாடு செய்த பின்பு அன்று இரவு திருநெல்வேலிக்குப் புறப்படும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆன்மிக சுற்றுலா ரயில் பிப்ரவரி 13 ஆம் தேதி அதிகாலை 02.50 மணிக்கு மதுரை வந்து, அங்கிருந்து புறப்பட்டு அன்று காலை 07.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த 12 நாள் சுற்றுலாவுக்கு பயணக் கட்டணம், தங்குமிடம், பயண வழிகாட்டி, பாதுகாப்பு அலுவலர், தென்னிந்திய உணவு வகைகள், உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து உட்பட குறைந்த கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ 26,850 வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன ரயில் பெட்டி பயணம் மற்றும் உயர் சிறப்பு வசதிகளுக்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ 38,470 மற்றும் ரூ 47,900 வசூலிக்கப்படுகிறது.
கட்டணத்திற்கு ஏற்ப ரயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலுக்கு பயணச்சீட்டு பதிவு செய்ய 8287931977 மற்றும் 8287932122 என்ற அலைபேசி எண்களில் மதுரை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.