`தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது’ - ஆளுநர் மாளிகை ட்விட்டர் ப...
2025 கும்பமேளாவுக்குப் போகிறீர்களா? இதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
கோலாகலமாக தொடங்க இருக்கும் மகாகும்பமேளா விழா- 10 கோடி பக்தர்களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு! 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாகும்பமேளாவிற்கு பின்னர் 12 ஆண்டுகளுக்கு கழித்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது.
இந்தியாவின் மாபெரும் ஆன்மிக சங்கமான கும்பமேளா, உத்தர பிரதேச மாநிலம் பிரயோக்ராஜில் கங்கா யமுனா சரஸ்வதி போன்ற மூன்று நதிகள் ஒன்று சேரும் இடமான திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். 12 வருடங்களுக்கு ஒரு முறை மகாகும்பம்மேளா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2013 ஆம் ஆண்டுக்கு பின் அடுத்த ஆண்டு 2025-ல் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. தேசத்தின் மிகப்பெரிய ஆன்மிகம் நிகழ்வான இதில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல லட்சம் மக்கள் பங்கேற்று புனித நதியில் நீராடி பிரார்த்தனை செய்வது வழக்கம் .கும்பமேளா என்றால் புனித குடத்தின் திருவிழா என்று பெயர்.
"தேவர்கள், ஆசுரர்களுடன் பல யுத்தங்களில் போரிட்டு துர்வாச ரிஷியின் சாபத்தினால் சக்தியற்ற நிலையில் இருந்தனர். தங்கள் சக்தியை மீண்டும் பெறுவதற்கு அமிர்தம் தேவைப்பட்டது. இதற்காக மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டனர். பாற்கடலை கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என மகாவிஷ்ணு அறிவுறுத்தினார். தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதற்கு தயாராகினர். இதனை சமுத்ர மந்தனம் என்பர். இதற்காக மந்தர மலையினை பயன்படுத்தினார்கள். மந்தர மலை இடிந்து விழாமல் இருக்க வாசுகி என்ற பாம்பினை கயிறாக பயன்படுத்தினர். கடலை கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளியேறியது. இவை உலகத்தையே அழிக்கக்கூடும் என்பதால், சிவபெருமான் இதனை அருந்தி தனது கழுத்தினில் வைத்துக்கொண்டார்.
இதனாலே சிவபெருமானை "நீலகண்டன்" என்று அழைக்கிறோம். பாற்கடலை கடைய தொடர்ந்தபோது, மேலும் பாரிஜாத மரம், காமதேனு பசு போன்றவை வெளியேறியது. இறுதியாக தன்வர்ரீயின் திருகரங்களிலிருந்து அமிர்த கும்பம் வெளிவந்தது. அமிர்தத்தை தேவர்கள் மட்டுமே அருந்த வேண்டும் என கூறப்பட்டது .ஆனால் அசுரர்கள் இதனை தமதாக்க நினைத்தனர். அமிர்தம் ஆசுரற்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக மகாவிஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்து அமுதத்தை எடுத்து சென்றார். அப்பொழுது அந்த அமுதகலசத்தில் இருந்து, நான்கு துளிகள் மட்டும் பிரயாக்ராஜ் , நாசிக் ,ஹரித்வார், உஜ்ஜைன் ஆகிய நான்கு இடத்தில் இருக்கும் நதிகளில் விழுந்தது. இதனால் இந்நதிகள் புனித தன்மை வாய்ந்ததாக மக்களால் நம்பப்படுகிறது.
அமுத கும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு பிரகஸ்பதி ,சூரியன், சனி, சந்திரன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது .அமுத கும்பத்திற்காக தேவர்களுக்கும் ஆசுரர்களுக்கும் இடையே 12 நாட்களாக இழுப்பறிப்போர் நிகழ்ந்தது. இவை மனிதர்களுக்கு 12 ஆண்டுகளாக கணக்கு, என்பதால் கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. உத்தரகாண்டில் உள்ள ஹரித்வாரில் கங்கை நதியும் ,உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனா ,சரஸ்வதி போன்ற நதிகளும், மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கிள் கோதாவரி நதியும், மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜெயினில் சிப்ரா நதியிலும் கும்பமேளா நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நடைபெறுவது வழக்கம். கும்பமேளா நாட்களில் இந்த புனித நதி மேலும் புனித தன்மை பெறுவதால் இவ்வாறான நாட்களில் உலகெங்கும் இருக்கும் மக்கள் நதியில் நீராட்டுவதனால் தங்களது மனம் தூய்மையாகும் என நம்புகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதுனை மகாகும்பமேளா எனவும் ஆறு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுவதனை ஆதகும்பமேளா எனவும் கூறுவர் .ஆதா என்றால் அரை அல்லது பாதி என்று பொருள் .மகா கும்பமேளா பிராயாக்ராஜிலும் ,ஆதகும்பமேல ஹரித்வார், நாசிக் ,மற்றும் உஜ்ஜைனில் நடைபெறுவது வழக்கம்.
கங்கா, யமுனா, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்களாக மிக விமர்சையாக கொண்டாடப்படும். பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த மகாகும்பமேளா நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக சிந்தனையின் அடையாளமாக உள்ளது. சாதி ,மதம், பாலின வேறுபாடுகள் இல்லாமல் மூன்று நதிகள் சங்கமிக்கும் இந்த புண்ணிய இடத்தில் துறவிகள், ஞானிகள், மகான்கள் ,சாமானிய மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு கங்கையில் நீராடி சிவ பெருமானுக்கு நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு செய்வர். இதனால் தங்களது பாவங்கள் நீங்கி, பிறப்பு இறப்பு சுழற்றிலிருந்து விடுபடுவதாக நம்புகிறார்கள்.
சூரியன் ,சந்திரன், வியாழன் போன்ற கோள்களில் அடிப்படையில் கும்பமேளா நடைபெறும். இங்கு முற்றும் திறந்த அகோரிகள் தங்களது பாவத்தை போக்குவதற்கு 'ஹர ஹர மஹாதேவா' என்ற முழுக்கத்துடன் புனித நீரில் நீராடுவதை காணலாம். லட்சக்கணக்கான அகோரிகள் மற்றும் மக்கள் தங்குவதற்கான இட வசதியும் பிரயாக்ராஜில் செய்து தரப்படுகிறது. 12 சிவன் அவதாரங்கள் ஒன்றாக கூடும் இடமான கும்ப மேலாவில் ஒரு நாளைக்கு 20 லட்சம் பக்தர்கள் வீதம் மொத்தமாக 10 கோடிக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளிலும் கடைசி இரண்டு நாளிலும் இரண்டு முதல் நான்கு கோடி பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழாவான கும்பமேளாவில் சேரும் பக்தர்கள் கூட்டம் வேறு எந்த விழாவிற்கும் இந்திய நாட்டில் சேர்வதில்லை.
கும்பமேளா போன்ற பிரம்மாண்டமான நிகழ்வு வெற்றி பெறுவதற்காக நவாமி கங்கே திட்டத்தின் மூலமாக பிராயாக்ராஜ் நகரில் சுகாதாரத்திற்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் கவனம் செலுத்துகிறார்கள். உத்திர பிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளாவிற்கு ஈடாக கும்பகோணத்தில் மகா மகம் நடைபெறுவது வழக்கம். கும்பமேளாவில் ஜனவரி 13, 14 ,29 மற்றும் பிப்ரவரி 3, 4, 5, 12 ,26 போன்ற நாட்கள் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.