செய்திகள் :

Ajithkumar: "விசில் அடித்துக் கொண்டாட நான் ஓடோடி வருவேன் அண்ணா"- நெகிழ்ந்த விவேக் ஓபராய்

post image
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' என இரண்டு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது.

இதனிடையே சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டு  3-ம் இடம் பிடித்து வெற்றிபெற்றார். இந்த வெற்றியைப் பாராட்டி சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அஜித்துக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது.

Ajith Kumar
நடிகர் அஜித்

அஜித் ரசிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அஜித் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் அஜித் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கார் ரேஸ் ஒன்றில் கலந்துகொண்ட அவர் அஜித் குறித்துப் பேசியிருக்கிறார். “அஜித் அண்ணா எப்படி இருக்கீங்க? உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கவேண்டும். உங்கள் வழியைத்தான் நான் பின்பற்றி வருகிறேன்.

விவேக் ஓபராய்

கடந்தமுறை நீங்கள் ரேஸில் பங்கேற்றபோது உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. அடுத்தமுறை எனக்கு போன் செய்தால் உங்களுக்காக விசில் அடித்துக் கொண்டாட நான் ஓடோடி வருவேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Udit Narayanan: `அது அசிங்கமான ஒன்று அல்ல!' - சர்ச்சைக்கு உதித் நாராயணன் சொல்லும் பதில் என்ன?

முன்னணி பாடகர் உதித் நாராயணன் குறித்தான பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது.சமீபத்தில், உதித் நாராயணனின் கான்சர்ட்டில் பாடிக் கொண்டிருக்கும்போது மேடையை நோக்கி அவரின் பெண் ரசிகர்கள் ... மேலும் பார்க்க

Shah Rukh Khan: "உங்களுடன் போட்டிப்போடுவது கடினம்..." - தென்னிந்திய நடிகர்கள் குறித்து ஷாருக்கான்

துபாயில் நடந்த குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். அது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், "எனக்குத் தென்னிந்தியாவில் நிறை... மேலும் பார்க்க

``சல்மான் கானை திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால்..'' -ரசிகரின் வேண்டுதல், அமீஷா பட்டேல் பதில்!

பாலிவுட்டில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நடிகராக இருப்பது சல்மான் கான் மட்டுமே. நடிகைகளில் அமீஷா பட்டேல், தபு, கங்கனா ரனாவத் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடிகர்களில் சல்மான் கான் போன்ற ஒ... மேலும் பார்க்க

SRK: இடித்துக் கட்டப்படவுள்ள ஷாருக்கான் வீடு; போட்டிப் போடும் பில்டர்கள்; காரணம் என்ன?

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை பாந்த்ராவில் மன்னத் என்ற பங்களா இருக்கிறது. இப்பங்களாவில்தான் அவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கடற்கரை அருகில் இருக்கும் இப்பங்களாவைக் காண தினமும் நூற்ற... மேலும் பார்க்க

SRK: நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறா? அரசிடம் பணத்தைத் திரும்பக் கேட்கும் ஷாருக்; என்ன நடந்தது?

நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை பாந்த்ரா கடற்கரை அருகில் மன்னத் என்ற பங்களா இருக்கிறது. இப்பங்களாவின் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடியாகும். ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கெளரி கான் பெயரிலுள்ள இப்பங்களா இர... மேலும் பார்க்க

Bollywood Threat mail: பாலிவுட் பிரபலங்களுக்கு வரும் கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள்! - போலீஸ் விசாரணை

சமீப காலமாகவே பாலிவுட் பிரபலங்களுக்குத் துப்பாக்கிச்சூடு மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் போன்றவை வந்த வண்ணமிருக்கின்றன.குறிப்பாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியத... மேலும் பார்க்க