செய்திகள் :

``புதுச்சேரி மின்துறை புதிய புதிய பெயர்களில் கொள்ளை அடிக்கிறது!'' -பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காட்டம்

post image

புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சாமிநாதன் மின்துறையின் கட்டணக் கொள்ளையை கடுமையாக சாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``புதுச்சேரி மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ. 7 முதல் ரூ.10 வரை வசூல் செய்து கொள்ளை அடிக்கும் துறையாக இருக்கிறது மின்துறை. இந்தியாவிலேயே பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டுக் கட்டணங்களை வசூல் செய்வது புதுச்சேரி மின்துறையில் மட்டுமே. அதனால் புதுச்சேரி மக்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்கெனவே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, தற்போது ஆட்சி செய்யும் கட்சியை வீழ்த்துவதற்கு தயாராக இருக்க வேண்டும். மின்கட்டணம் என்ற பெயரில் ஏழை நடுத்தர மக்களை இந்த அரசு மாதம்தோறும் ஏமாற்றி வருகிறது.

சாமிநாதன் வெளியிட மின்கட்டண ரசீதுகள்

இந்தக் கட்டணங்கள் குறித்து பொது மேடையில் விவாதம் செய்வதற்கு அரசு இப்போதே தயாராகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த கட்டணக் கொள்ளை குறித்து விரைவில் புதுச்சேரி மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தை நடத்த இருக்கிறோம். யூனிட்டுக்கு குறைந்த கட்டணம் என்ற பெயரில் Short Claim, FPPCA Charges, Surcharges, Fixed S.C., B.P.S.C., DL Adj Amount, Prompt PMT Re-bate, SD Interest, Subsidy, Excess Adjusted என மறைமுகமாக கட்டணங்களை வசூல் செய்து மக்களை ஏமாற்றி வருகிறது புதுச்சேரி அரசு. புதுச்சேரியை 50 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் மட்டுமல்ல, தற்போது ஆட்சி செய்யும் அரசும் மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அதனால் இளைஞர்கள் அனைவரும் தலைமையேற்று புதிய அரசை உருவாக்க முன்வர வேண்டும்.

இந்த மாதம் மின் உபயோகிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மின்கட்டண ரசீதுகளை தற்போது வெளியிட்டிருக்கிறோம். அவற்றை ஒவ்வொருவரும் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உங்கள் கண்டனங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இலவசம் என்ற பெயரில் 5, 10 மற்றும் 20 கிலோ அரிசியைக் கொடுத்துவிட்டு அதைவிட அதிகமான தொகையை, வரி என்ற பெயரில் மக்களிடமே வசூல் செய்து மக்களிடமே கொடுக்கும் ஏமாற்று வேலையை இந்த அரசு செய்து வருகிறது. பதவியும், ஆட்சியும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு குறிக்கோளாக இருக்கிறது. அதனால் புதுச்சேரி மாநிலத்தை மீட்க பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். இல்லையென்றால் புதுச்சேரி மாநிலம் மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற மாநிலமாக மாறிவிடும்.

புதுச்சேரி அரசு

பதவியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளை மக்கள் இனம் காண வேண்டும். இந்த செய்தியை படிக்கும் அனைவரும் தங்களது வீட்டுக்கு வரும் மின்சார ரசீதில், எவ்வளவு யூனிட் செலவாகிறது என்பதை கணக்குப் போட்டுப் பார்த்து இந்த அரசின் பொய்யான வாக்குறுதியை தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரி மாநிலத்தில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம், மோசமான மீட்டர் போன்றவற்றால் மின்துறை சீரழிந்து வருகிறது. ரூ.500 மதிப்புள்ள அரிசியை இலவசமாக கொடுத்துவிட்டு, மின் கட்டணம், குப்பை வரி, வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி, தண்ணீர் வரி என மக்களிடம் ஆயிரக்கணக்கில் வசூல் செய்கிறது. அவற்றை எதிர்த்து மக்கள் போராட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்ற சிறப்பை பெறுகிறார்.மதுரை மாநகராட்சிபாரம்பரிய நகரமான மதுரை, நகரா... மேலும் பார்க்க

``நான் பேசிய வீடியோ இதுதான்.. திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்'' -சுரேஷ்கோபி விளக்கம்

பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சுரேஷ்கோபிகேரள மாநிலம் திருச்சூர் தொகுதி எம்.பி-யான நடிகர் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராக உள்ளார். டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈட... மேலும் பார்க்க

``37,000 கி.மீ வேகத்தில் ராக்கெட்டை இயக்கும் இன்ஜின் தயாரிக்கிறோம்'' -ISRO தலைவர் நாராயணன் பெருமிதம்

இஸ்ரோ தலைவராக பொறுபெற்றுள்ள நாராயணனுக்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேலகாட்டுவிளையில் பாராட்டுவிழா நேற்று மாலை நடைபெற்றது. இஸ்ரோவில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் நா... மேலும் பார்க்க

TVK: ``2026 -ல் பண்ணையார் மனநிலையை தவெக அப்புறப்படுத்தும்!'' -ஆதவ் அர்ஜூனா

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தவெக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், '1967 -ல் அண்ணா பண்ணையார்களின் ஆதிக்கத்தை ஒழித்ததை... மேலும் பார்க்க

``நவீன வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் சாரண இயக்க அலுவலகம்'' -முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் பிரமாண்ட விழா..திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த மாதம் 28 -ம் தேதி தொட... மேலும் பார்க்க

``பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 56.33%'' -தெலங்கானாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை..

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துவருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டுமெ... மேலும் பார்க்க