செய்திகள் :

``37,000 கி.மீ வேகத்தில் ராக்கெட்டை இயக்கும் இன்ஜின் தயாரிக்கிறோம்'' -ISRO தலைவர் நாராயணன் பெருமிதம்

post image

இஸ்ரோ தலைவராக பொறுபெற்றுள்ள நாராயணனுக்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேலகாட்டுவிளையில் பாராட்டுவிழா நேற்று மாலை நடைபெற்றது. இஸ்ரோவில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் நாராயணனுக்கு விழா மேடையில் கிராம மக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, போலீஸ் எஸ்.பி.ஸ்டாலின் மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசுகையில், "என்மீது நம்பிக்கை வைத்து என்னை இஸ்ரோ தலைவராக தேர்வு செய்த பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்பு இஸ்ரோவை வழி நடத்தியவர்கள் பெரும்பெரும் அறிஞர்கள்.  இந்த பொறுப்பு எனக்கு கிடைத்ததற்கு மக்களின் நன்மதிப்பும், இறைவனின் அருளும் முக்கிய காரணம் ஆகும்.

இஸ்ரோ தலைவர் நாராயணனை குமரி கலெக்டர் அழகுமீனா வாழ்த்தினார்

நான் படிக்கும்போது வகுப்பு கட்டமைப்பு சரியாக இல்லாவிட்டாலும் திறமையான ஆசிரியர்கள் இருந்தனர். நாட்டிற்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கிய இறைவனுக்கும், பெற்றோர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது முன்னேற்றத்திற்கு நண்பர்களும், உறவினர்களும் ஆதரவும் இருந்தது. இஸ்ரோ தலைவர் போன்று உயர் பதவி கிடைத்ததற்கு எனது தகுதியை காட்டிலும் முக்கிய காரணம் என்னுடன் பணியாற்றும் பணியாளர்கள் பங்கு மிக முக்கியம் ஆகும். எனது வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு கஷ்டங்களுக்கும் எனக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் என் மனைவி மற்றும் குழந்தைகளும் இருந்தனர்.

மனிதனை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக திருப்பி கொண்டுவரும் திட்டம் 20,000 கோடி ரூபாய் மதிப்பில் துரிதமாக நடைபெற்று வருகிறது. பாரத விண்வெளி நிலையம் அமைக்க இஸ்ரோ சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக 2028-ம் ஆண்டில் முதல் ராக்கெட் அனுப்பப்பட உள்ளது. நிலவில் தரை இறங்கி, நிலவின் மாதிரியை கொண்டு வந்து ஆய்வு செய்ய சந்திரயான் 4 திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஜப்பானுடன் இணைந்து சந்திராயன் 5 திட்டத்தை செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. 30 ஆயிரம் கிலோ எடையை சுமார்ந்து செல்லும் 1000 டன் எடையுள்ள ராக்கெட் ( NGLV ) தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. இதற்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது.

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு பாராட்டுவிழா

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. வெளிநாட்டின் 433 செயற்கை கோள்களை நமது ராக்கெட்டுகள் மூலம் அனுப்பி உள்ளோம். 37 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் ராக்கெட்டை இயக்கும் இன்ஜின் மகேந்திரகிரியில் தயாரிக்கப்பட்டுவருகிறது. சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டை கொண்டாடும்போது இந்தியா வல்லரசாக மாறும். இளைஞர்களும் மாணவர்களும் வெற்றியடையவேண்டும் என்றால் இறைவனின் அருளும், பெற்றோரின் ஆசீர்வாதமும் வேண்டும்" என்றார்.

US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?!

அமெரிக்க அதிபர்களிலேயே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர், ட்ரம்ப். தனது முந்தைய பதவி காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கடும் வரிகளை விதித்தார், அவர். பதிலுக்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்ற சிறப்பை பெறுகிறார்.மதுரை மாநகராட்சிபாரம்பரிய நகரமான மதுரை, நகரா... மேலும் பார்க்க

``நான் பேசிய வீடியோ இதுதான்.. திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்'' -சுரேஷ்கோபி விளக்கம்

பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சுரேஷ்கோபிகேரள மாநிலம் திருச்சூர் தொகுதி எம்.பி-யான நடிகர் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராக உள்ளார். டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈட... மேலும் பார்க்க

``புதுச்சேரி மின்துறை புதிய புதிய பெயர்களில் கொள்ளை அடிக்கிறது!'' -பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காட்டம்

புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சாமிநாதன் மின்துறையின் கட்டணக் கொள்ளையை கடுமையாக சாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``புதுச்சேரி மாநி... மேலும் பார்க்க

TVK: ``2026 -ல் பண்ணையார் மனநிலையை தவெக அப்புறப்படுத்தும்!'' -ஆதவ் அர்ஜூனா

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தவெக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், '1967 -ல் அண்ணா பண்ணையார்களின் ஆதிக்கத்தை ஒழித்ததை... மேலும் பார்க்க

``நவீன வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் சாரண இயக்க அலுவலகம்'' -முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் பிரமாண்ட விழா..திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த மாதம் 28 -ம் தேதி தொட... மேலும் பார்க்க