செய்திகள் :

`இதைக் குடியுங்கள்... உங்களை மருத்துவமனையில் சந்திக்கிறேன்'- கெஜ்ரிவாலை சாடிய ராகுல் காந்தி

post image
டெல்லியில் வரும் புதன் கிழமை (பிப்ரவரி 5) தேர்தல் நடைபெற இருக்கிறது.

இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது.  இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் பேசியிருக்கும் ராகுல் காந்தி, " யமுனை ஆற்றை சுத்தம் செய்வதாக டெல்லியின் முன்னாள் முதல்வர் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆனால் அவர் அதனை செய்யவில்லை” என்று அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டிக்காட்டியவர் அவரை ஆற்றில் குளிக்கும்படி சவால் விடுத்தார். மேலும் அழுக்கு நிறத்தில் இருந்த யமுனை ஆற்றின் நீரை ஒரு சின்ன பாட்டிலில் அடைத்து கையில் வைத்துக்கொண்டிருந்த ராகுல் காந்தி யமுனை ஆற்றின் ஒரு சொட்டு நீரைப் பருகுங்கள் அரவிந்த் கெஜ்ரிவால்.

உங்களை மருத்துவமனையில் வந்து சந்திக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “ நான் புதிய அரசியலைக்கொண்டு வருவேன். ஊழலை ஒழிப்பேன். யமுனை நதியை 5 ஆண்டுகளில் சுத்தம் செய்வேன்” என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.   

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Kalpana Nayak:``பெண் ஏ.டி.ஜி.பி உயிருக்கே பாதுகாப்பு இல்லையா?" - திமுக அரசை சாடும் எதிர்க்கட்சிகள்

தமிழ்நாடு ஏ.டி.ஜி.பி அதிகாரி கல்பனா நாயக், கடந்த ஆண்டு ஜூலையில் எழும்பூரில் தனது அலுவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தன்னை கொல்லும் முயற்சியில் நடத்தப்பட்ட சம்பவம் என்றும், புகாரளித்து 6 மாதங்களுக்கு மேலாக... மேலும் பார்க்க

வேங்கை வயல் விவகாரம்: `வன்கொடுமை வழக்கல்ல...' - சிபிசிஐடி மனுவை ஏற்ற நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் ந... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., விவகாரம்: "பத்திரிகையாளர்களின் போன்கள் பறிமுதல் செய்ய அவசியம் என்ன?"- இபிஎஸ் கேள்வி

சமீபத்தில் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி சம்பவங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரை இந்த விவக... மேலும் பார்க்க

"மாஞ்சோலை படுகொலை மாதிரி இந்த போராட்டமும் மாறிடக்கூடாது" - தொடரும் மாஞ்சோலை பெண்களின் அறப்போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என ஐந்து எஸ்டேட் பகுதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள சுமார் 8,373.57 ஏக்கர் நிலத்தை, 'பாம... மேலும் பார்க்க

Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் பேச்சும் விளக்கமும்

"பழங்குடியினர் நலத்துறையைப் பிராமணர்கள், நாயுடுக்கள் போன்ற உயர் பிரிவினர் நிர்வகிக்க வேண்டும்" என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியுள்ளது... மேலும் பார்க்க