சநாதன விவகாரம்: உதயநிதிக்கு எதிராக புதிய வழக்குகள் பதிய தடை!
தொண்டியில் சாலையின் குறுக்கே நிற்கும் கால்நடைகளால் விபத்து
தொண்டி பகுதியில் சாலையின் குறுக்கே நிற்கும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையின் குறுக்கே வந்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குளாகி வருகின்றனா்.
இது குறித்து தொண்டி பேரூராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலனிக்கவில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, சம்பந்தபட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.