செய்திகள் :

`உங்க நண்பர் சஞ்சீவுடன் என்னதான் பிரச்னை?’ - நடிகர் ஶ்ரீகுமார் சொல்வது என்ன?

post image

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிற 'தனம்' தொடரில் கமிட் ஆகி இருக்கிறார் நடிகர் ஶ்ரீகுமார். பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன், நடிகை ஷமிதாவின் கணவர் என இவருக்கு வேறு சில அடையாளங்கள் இருந்தாலும் எவற்றையும் விசிட்டிங் கார்டாக பயன்படுத்த நினைக்காதவர். டிவிக்கு வந்து சுமார் 25 ஆண்டுகள் ஓடிவிட்ட போதும், இன்றும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிற  இவர் இதற்கு முன் ஜீ தமிழில் 'யாரடி நீ மோகினி', சன் டிவியில் 'வானத்தப் போல' ஆகிய ஹிட் சீரியல்களில் நடித்திருந்தார்.

'தனம்' தொடரில் கெஸ்ட் ரோல், அதாவது தொடரில் ஆரம்ப சில எபிசோடுகளில் மட்டுமே வருவீர்கள் என்கிறார்களே' என்ற கேள்வியுடன் அவரைச் சந்தித்தோம்.

'''கடைசியா 'வானத்தப் போல' தொடர் நல்ல ரீச்சைத் தந்தது. அது முடிஞ்சதும் வேற சீரியல் எதுலயும் கமிட் ஆகாம இருந்தேன். இடையில 'அமரன்' உள்ளிட்ட சில படங்கள்ல சின்னச் சின்ன ரோல் பண்ற வாய்ப்பு வந்தது.

இதுக்கு முன்னாடி 'தெறி'யிலயும் சரி, 'அமரன்'லயும் சரி சின்ன ரோல்தான். ஆனா ஓடுற படங்கள்ல நீங்க இருக்கணும்'னு என் மனைவி சொல்லியிருக்காங்க. சீரியல்களைப் பொறுத்தவரை 'அகல்யா', 'சிவசக்தி' தொடங்கி இப்ப வரைக்கும் எனக்கான கேரக்டர் கிடைச்சிட்டே இருக்கு. எனக்கு இந்த வாய்ப்புகளை ஜீசஸ் தர்றார்னு நான் நம்பறேன்.

ஶ்ரீ குமார்

வாய்ப்பு கிடைச்சிடுச்சுன்னா, அந்தக் கேரக்டருக்கு என்ன செய்யணுமோ அதை இருநூறு சதவிகிதம் செய்யணும்னு நினைப்பேன். இந்த ஒரு விஷயத்தாலதான் இன்னைக்கு வரைக்கும் என்னால டிவியில இருக்க முடியுது.

'தனம்' தொடரைப் பொறுத்தவரை கெஸ்ட் ரோல்னு சொல்லிதான் வந்தாங்க. 'எதுக்குங்க அப்படி நடிக்கணும்'னுதான் முதல்ல கேட்டேன். கதை பத்திக் கொஞ்சம் கேளுங்கனு சொன்னாங்க. உடலுறுப்பு தானம் பண்ற கேரக்டர் அதுனு கேட்ட அந்த நிமிஷமே எனக்கு கனெக்ட் ஆகிடுச்சு.

`சஞ்சீவுடன் என்ன பிரச்னை?’

ஏன்னா, இருபது வருஷத்துக்கு முன்னாடியே என்னுடைய உடல்ல மற்றவர்களுக்குப் பயன்படக் கூடிய எல்லா உறுப்புகளையும் தானம் செய்து எழுதிக் கொடுத்தவன் நான். இந்த ஒரு விஷயத்தாலேயே கொஞ்ச எபிசோடுன்னாலும் பரவால்லனு  நடிக்கச் சம்மதிச்சேன்'' என்றவரிடம்

சக நடிகர் சஞ்சீவுடன் என்ன பிரச்னை என்ற கேள்வியையும் வைத்தோம்.

சஞ்சீவ், ஶ்ரீகுமார்

''சஞ்சீவும் நானும் இன்னைக்கு நேத்து நண்பர்கள் இல்லை. டிவிக்கு வந்த நாள்ல இருந்தே இருந்து வர்ற நட்பு எங்களுடையது. அவனும் விஜய் சாரும் ஒருகாலத்துல நண்பர்களா இருந்தவங்க. ஆனா இன்னைக்கு விஜய் சார் இருக்கிற இடம் வேற. அதனால இப்ப பழைய விஷயங்களைப்  பத்திப்  பொதுவெளியில பேசறப்ப கொஞ்சம் கவனமா பேசணும். இல்லாட்டி ட்ரோல் மெட்டீரியலா ஆகிடுவோம். நானும் நடிகர் சூர்யா சாரும் ஒரு நேரத்துல ஒரே இடத்துல பின் வரிசையில நின்னு டான்ஸ் ஆடினவங்கதான். ஆனா இன்னைக்கு அப்ப நடந்ததையெல்லாம் ஓப்பனா பேசறேன்னு  சொல்லி எல்லாத்தையும் பேசினா அதை யாரும் ரசிப்பாங்களா என்ன? இதைத்தான் சொன்னேன்.

ஆனா நானுமே இதை நேரடியா அவன்கிட்டயே சொல்லியிருக்கலாம். பொதுவெளியில சொல்லியிருக்கக் கூடாதுன்னு பிறகு தோணுச்சு. உடனே ஸாரியும் கேட்டுட்டேன். அவனுமே அதைப் பெரிசா எடுத்துக்கலை'' என்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Siragadikka aasai : பெரிய பிரச்னையில் சிக்கிய மீனா; முத்து எப்படி சமாளிப்பார்?

சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்த்திராதப் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. பரசுவின் மகள் திருமணம், மனோஜ் சந்தித்த விபத்து, புதிதாக இரண்டு காதல் டிராக் என கதை களைகட்டுகிறது. தற்போது வெளியாகி... மேலும் பார்க்க

`நிம்மதியா நடிக்கக்கூட முடியலை, பத்து நாளா மன உளைச்சல்ல இருக்கேன்’ - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசனில் மூர்த்தியாக வந்து சீரியல் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் ஸ்டாலின். முதல் சீசன் ஹிட் ஆனதால் தற்போது இரண்டாவது சீசனிலும்தொடர்கிறார்.இந்நிலையில் சில தினங்களுக்கு ... மேலும் பார்க்க

Jodi Are You Ready 2: "எனக்கும் ரியோவுக்கும் இடையேயான ஃபன் ஸ்கிரிஃப்ட் கிடையாது'' - ஸ்ரீ தேவி பேட்டி

`ஜோடி ஆர் யூ ரெடி' நிகழ்ச்சியின் சீசன் 2 விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.முதலாவது சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரம்பா, ஸ்ரீ தேவி, சாண்டி, லைலா ஆகியோர் நடுவர்களாகப் பங்கு வகித்து வரு... மேலும் பார்க்க

Siragadikka aasai : மனோஜுக்கு ஏற்பட்ட பெரிய விபத்து, கதையில் முக்கியத் திருப்பம்?!

சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை சீரியலில் கதையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனோஜுக்கு விபத்து நேர்ந்து கண்களில் அடிப்பட்டுள்ளது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.நேற்ற... மேலும் பார்க்க

`துணிஞ்சு ஆரம்பிச்சிட்டோம்; ஆனா ஹெவி வேலை..!’ - மிர்ச்சி செந்தில் - ஶ்ரீஜா ஜோடியின் புது பிசினஸ்

நடிகர் மிர்ச்சி செந்தில் - ஶ்ரீஜா தம்பதி, கேரள மாநிலம் திருவல்லாவில் புதிய ஹோட்டல் ஒன்றைத் திறந்துள்ளனர். ஹோட்டலின்நிர்வாகத்தைஶ்ரீஜா கவனித்துக் கொள்கிறாராம்.எஃப்.எம். ரேடியோ பிரபலமாக இருந்த சமயத்தில்,... மேலும் பார்க்க