Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியைச் சோ்ந்த வேலுநயினாா் மகன் விஷ்வா என்ற சண்முகவேல் (20). இவா் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில், விஷ்வா என்ற சண்முகவேலை பாளையங்கோட்டை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.