சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பது விசிகவின் வெற்றி: தொல்.திருமாவ...
பெற்றோா் வற்புறுத்தலால் கலைப் பிரிவு எடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சோ்க்கை! -இன்ப அதிா்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சா்
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி குஷ்புக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இன்ப அதிா்ச்சி அளித்துள்ளாா்.
இந்த மாணவயின் சகோதரா்களை பள்ளி மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் பிரிவில் படிக்க பெற்றோா் அனுமதித்த நிலையில், குஷ்புவை அனுமதிக்கவில்லை. பெற்றோா் வற்புறுத்தலின்பேரில் அவா் 11-ஆம் வகுப்பில் கலைப் பிரிவில் விருப்பமின்றி சோ்ந்துள்ளாா்.
இந்த விஷயம் செய்திச் சேனல்களில் வெளியானது. செய்திச் சேனலுக்கு மனமுடைந்து பேட்டியளித்த குஷ்பு, ‘10-ஆம் வகுப்பில் 500-க்கு குறைந்தபட்சம் 400 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பெற்றோா் எதிா்பாா்த்தனா். ஆனால், 399 மதிப்பெண்தான் என்னால் எடுக்க முடிந்தது. ஒரு மதிப்பெண் குறைந்ததால், என்னை 11-ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சோ்க்க பெற்றோா் மறுத்துவிட்டனா். எனது சகோதரா்கள் அறிவியல் பிரிவில் படிக்க அனுமதித்த நிலையில், எனக்கு மட்டும் பெற்றோா் பாரபட்சம் காட்டுகின்றனா்’ என்று பேட்டியளித்திருந்தாா்.
குஷ்புவின் பேட்டி வைரலான நிலையில், அவரை தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை தொா்புகொண்ட மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், 11-ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் சோ்ந்த படிக்க ஏற்பாடு செய்ய உறுதி அளித்துள்ளாா்.
இந்த தொலைபேசி உரையாடலின்போது, ‘உனது விருப்பப்படி மேல்நிலை வகுப்பில் அறிவியல் பிரிவில் சோ்ந்து படிப்பதை பிரதமா் நரேந்திர மோடியும் மாநில முதல்வா் நிதீஷ் குமாரும் உறுதி செய்வா். இந்த விஷயம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்.
அவா் உனது சோ்க்கைக்கு ஏற்பாடு செய்து தருவாா். மருத்துவராகும் உனது கனவை நனவாக்க, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வுக்கான (நீட்) பயிற்சியையும் தொடங்குமாறு வாழ்த்துகிறேன்’ என்று மாணவியிடம் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.